×

ஸ்கேட்டிங் நட்சத்திரம் எகடரினா திடீர் மரணம்

மாஸ்கோ: ரஷ்யாவை சேர்ந்த பிரபல பிகர் ஸ்கேட்டிங் நட்சத்திர வீராங்கனை எகடரினா அலெக்சாண்ட்ராவ்ஸ்கியா (20 வயது) நேற்று திடீரென காலமானார். ரஷ்யாவில் பிறந்த எகடரினார், 2018ம் ஆண்டு தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார். ஆஸி. வீரர் ஹார்லி விண்ட்சருடன் இணைந்து 2017ம் ஆண்டு ஜூனியர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாஸ்கோவில் நேற்று எகடரினா காலமானார் என அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதுமில்லை. இளம் வீராங்கனையின் மறைவுக்கு அவரது ஸ்கேட்டிங் பார்ட்னர் ஹார்லி, சர்வதேச ஸ்கேட்டிங் சங்க தலைவர் ஜான் மற்றும் விளையாட்டு உலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரியில், ‘உடல்நல பிரச்னைகள் காரணமாக நானும் எகடரினாவும் இணைந்து விளையாட முடியாத நிலையில் உள்ளோம். அவர் விரைவில் குணமாகவும், சிறப்பான எதிர்காலம் அமையவும் வாழ்த்துகிறேன்’ என்று விண்ட்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Ekaterina , Skēṭṭiṅ, naṭcattiram, ekaṭariṉā, maraṇam
× RELATED சில்லி பாயின்ட்…